Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தீபாவளிக்கு பாமாயில் விநியோகம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

தீபாவளிக்கு பாமாயில் விநியோகம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிப்பதற்காக கடந்த ஜூன் 5-ம் தேதி டெண்டர் வெளியிட்டது.

பகிரவும் WhatsApp Facebook

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் சப்ளை செய்வது தொடர்பான நுகர்பொருள் வாணிபக் கழக உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகிப்பதற்காக ஒரு லிட்டர் வீதம் சுமார் 6 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கடந்த ஜூன் 5-ம் தேதி டெண்டர் வெளியிட்டது.


4 நிறுவனங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகளை அக்டோபர் 29-ம் தேதிக்குள் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கும்படி, செப்டம்பர் 29-ம் தேதி உத்தரவிடப்பட்டது.

வினியோகம் செய்யவேண்டிய பாமாயில் பாக்கெட்டுகள் விகிதாசார அடிப்படையில் சப்ளை செய்யும்படி உத்தரவிடப்படவில்லை என கூறி பாமாயில் சப்ளை செய்வதற்கான டெண்டர் எடுத்துள்ள கே.டி.வி. ஹெல்த் ஃபுட் நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், 3 கோடியே 60 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ள தங்கள் நிறுவனம் 34 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்றும் ஒரு கோடியே 50 லட்சம் பாக்கெட்டுகளை வினியோகம் செய்ய வேண்டிய எம்.ஜி.எம். ஆயில் நிறுவனம் 80 லட்சம் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் எனறும் உத்தரவிட்டது சரியானது அல்ல எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, பாமாயில் வினியோகம் தொடர்பாக செப்டம்பர் 29-ம் தேதி நுகர்பொருள் வாணிபக் கழகம் பிறப்பித்த உத்தரவுக்கு நவம்பர் 2-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

முந்தைய செய்தி
பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 28 குழந்தைகள் உயிரிழப்பு
அடுத்த செய்தி
ரூ.209 கோடியாக குறைக்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி GST நிலுவை!

தொடர்புடைய செய்திகள்